Sunday, 19 June 2011

Paru

நிலவில் நீர் உள்ளதா?
யார் சொன்னது?
ஆம் உண்மைதான்-
என்னைக் கண்டதும்....
உன் கண்களில்
ஆனந்தக் கண்ணீர்!

Tuesday, 22 March 2011

சங்கமம்

கடலில் நதி
உடலில் உயிர்
நடையில் குணம்
தடையில் முயற்சி
விடையில் தெளிவு
படையில் வீரம்
உடையில் அழகு
கொடையில் மகிழ்ச்சி
மடலில் எழுத்துப் போல் – தமிழில்
நீ சங்கமம்!